Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள்… ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கானை அக்டோபர் 7ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி… நீதிமன்றம் அதிரடி!!

நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரை அக்.7ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனாக இருக்கக்கூடிய ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தின்போது தடைசெய்யப்பட்ட கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர்.. இதில் நேற்று ஒரு நாள் 3 பேர் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு மும்பை முதன்மை விசாரணை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்..

அரசுத் தரப்பில் (போதை பொருள் தடுப்பு பிரிவு) ஆஜரான வழக்கறிஞர், குறைந்த அளவிலான போதைப்பொருட்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டாலும் இவர்களுக்கு போதைப் பொருள் விநியோகம் எப்படி வந்தது. அக்டோபர் 11 ஆம் தேதி வரை காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அதே நேரத்தில் ஆர்யன் கான் தரப்பில் வழக்கறிஞர், ஆர்யன் கான் சிறப்பு விருந்தினராக மட்டுமே அழைக்கப்பட்டார்.. அந்த நேரத்தில் கப்பலில் இருந்து தான் போதை பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.. அதேநேரத்தில் அவரிடமிருந்து எந்த ஒரு போதைப் பொருள் பறிமுதல் செய்ய வில்லை.. இதை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளே உறுதி செய்துவிட்டனர். விருந்து ஒருங்கிணைப்பாளர், கப்பல் உரிமையாளரிடமும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறினார்..

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆர்யன் கானிடமிருந்து பறிமுதல் செய்யப்படாத பட்சத்தில் அவரை எப்படி கைது செய்தீர்கள் கப்பலில் இருந்த அனைவரும் ஏன் கைது செய்யவில்லை என்று கடுமையாக சாடினார். பின்னர் அரசு தரப்பில், இந்த சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட கேளிக்கை விருந்து திட்டமிடப்பட்டு தான் நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து நாங்கள் குறைந்த அளவு தடை செய்யப்பட்ட கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்து இருக்கிறோம். முதற்கட்டமாக செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

செல்போனில் ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல் என்பது கிடைத்துள்ளது. குறிப்பாக போதை பொருள் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பது தொடர்பான ஆதாரம் முதல் கட்டமாக எங்களுக்கு கிடைத்துள்ளது. தேசிய அளவில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது..

இறுதியில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிமன்றம், அக்டோபர் 7ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.. மேலும் ஆர்யன் கான் உடன் கைது செய்யப்பட்ட மேலும் 2 பேரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.. தொடர்ச்சியாக ஆர்யன் கானிடம் விசாரணை நடைபெறும் எனவும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

 

Categories

Tech |