வாக்கு சேகரிக்க சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதே பகுதியில் வசிக்கும் இந்திராணி மற்றும் வைத்தியநாதன் ஆகிய 2 பேரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற இருப்தினால் இரு தரப்பினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்துள்ளனர். அதன்பின் வைத்தியநாதன் தரப்பைச் சேர்ந்த தொழிலாளியான வீராசாமி, வீரன் ஆகிய 2 பேரும் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது இந்திராணி தரப்பை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான கார் வேகமாக வந்து இருவரின் மீது மோதி பின் சாலையில் சென்ற பொம்மி மற்றும் பழனியம்மாள் மீது மோதி நின்றுள்ளது.
இதில் வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் விபத்தில் படுகாயமடைந்த பொம்மி, வீரன், பழனியம்மாள் ஆகிய 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீராசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி தகவலறிந்த வீராசாமியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முன்விரதத்தால் விபத்தை நிகழ்த்தி இருப்பதாகவும், இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி விபத்தை ஏற்படுத்திய காரை உடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வீராசாமியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது 17 வயது சிறுவன் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.