Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… எஸ்.பி.பி குரலில் தெறிக்கவிடும் ‘அண்ணாத்த’ பட முதல் பாடல்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடைசியாக ரஜினிக்காக பாடிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .

Categories

Tech |