கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் மற்றும் 25-வது தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர்கள் அமைப்பு பற்றிய சட்ட விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஆணைக்குழு செயலாளரான பாக்கியம் வரவேற்றுள்ளார்.
அதன்பின் விழிப்புணர்வு நீதிபதி ஜவகர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வாகனம் வீரப்பார் உள்பட 4 கிராமங்களுக்கு சென்று சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளது. மேலும் இவற்றின் நிறைவு நிகழ்ச்சி பண்ருட்டியில் நடைபெற்றுள்ளது.