நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்ரோகித் குமார் தனது நண்பர்களுடன் அண்ணா சமாதிக்கு பின்புறமாக இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய ரோகித் குமார் கடலுக்குள் மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படகு மூலம் ரோகித் குமாரின் உடலை தேடியுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு அருகே ரோகித் குமாரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.