கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு மீன்களும் பறவைகளும் அதிகமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருக்கும், ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் எரிகுழாய் உடைந்திருக்கிறது. அதிலிருந்து 3000 பீப்பாய் அளவு கொண்ட எண்ணெய் கசிந்து பசிபிக் பெருங்கடலின் 34 கிலோமீட்டர் தொலைவிற்கு பரவியுள்ளது. அதன்பின்பு மீன்களும் பறவைகளும் அதிகமாக இறந்து, கடற்கரையில் ஒதுங்கியது.
எனவே, மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, எண்ணெய் படலத்தை மேலும் பரவவிடாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்புப்பணியினர் விமானத்தில் சென்று, எண்ணெய் கசிந்த பகுதியை கண்டுபிடித்து தூய்மையாக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், ஹன்டிங்டன் மாநிலத்தின் மேயர், எண்ணெய் கசிவு ஏற்பட்டது பேரிடர் சுற்றுச்சூழல் பேரழிவு என்று கூறியிருக்கிறார். எண்ணெய் கசிவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.