பிரிட்டனின் இளவரசர் ஹரி மேகன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி புகழுக்காக மீண்டும் தனிமையை மீறும் செயலில் ஈடுபடுவதால் கண்டனம் எழுந்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் இளவரசரான ஹேரி மேகன் தம்பதியினர் ராஜ குடும்பத்தில் இருந்து தனிமை வேண்டும் என கூறி வெளியேறினர். இந்த நிலையில் தற்போது ராஜ குடும்பத்தின் பெயரைச் சொல்லி புகழை சம்பாதிக்க பார்ப்பதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு முறை பயணமாக பிற நாடுகளுக்கு செல்லுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஹரி மேகன் தம்பதியினர் நியூயார்க் நகரத்திற்கு சென்றனர். இந்தப் பயணத்தில் நியூயார்க்கின் மூத்த அரசியல்வாதிகளிடம் கொரோனா மற்றும் தடுப்பூசி குறித்த உரையாடலை நடத்தினர். இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக தனிமை வேண்டும் என ராஜ குடும்ப பொறுப்புகளை விட்டு ஒதுங்கிய ஹரி மேகன் தம்பதியினர் நெட்பிளிக்ஸ் ஆவணப்படங்கள், நேர்முக பேட்டி மற்றும் குடும்ப பயணங்கள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இதன்மூலம் ஹரி மேகன் தனியாக ஒரு ராஜ குடும்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் ராஜ குடும்ப விமர்ச்சகர் சார்லஸ் ரே கூறியதில், “ஹரி மேகன் இப்போது ராஜ குடும்ப உறுப்பினர்கள் கிடையாது. ராஜ குடும்பத்தின் பிரதிநிதிகளும் கிடையாது. தங்களுக்கு தனிமை வேண்டும் எனத் தெளிவாகக் கூறி சென்றார்கள். தற்போது மீண்டும் அவர்கள் தொடர்ந்து தனிமையிலிருந்து மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.