Categories
சினிமா தமிழ் சினிமா

என் சாவுக்கு அஜித் தான் காரணம்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. போலீஸ் விசாரணை….!!

தமிழ் திரையுலக நடிகர் தல அஜித் குமாரை அவருக்கு தெரியாமல் பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகியுள்ளது. இதனால் அஜித் சார்பில் அந்த வீடியோவை யார் எடுத்தது என்று விசாரித்து கண்டித்தனர். இதனால் அந்த பெண் வேலையை இழந்து ஒரு வருடமாக கஷ்டப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் தல அஜித்தை பார்த்து மன்னிப்பு கேட்கவும் மீண்டும் அதே வேலையில் சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கவும் அந்த பெண் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் அஜித் வீட்டு வாசலிலே வைத்து அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து சுரேஷ் சந்திரா என்ற பெண்ணிடம் இருந்து பர்சானாவிற்கு வாட்ஸ்அப் மூலம் ஆடியோ பதிவு வந்தது. அந்தப் பதிவில் குழந்தை படிப்புக்கு வேண்டுமானால் பத்தாயிரம் தருக்கிறேன்.

ஆனால் வேலைக்கு பரிந்துரை செய்ய மாட்டேன் என்றும அஜித் கூறியதாக சுரேஷ் சந்திரா என்ற பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  அந்தப் பெண் அஜித் வீட்டின் முன் வந்து தனது சாவுக்கு அஜித் தான் காரணம் என்று கூறியபடி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதனை அறிந்து வந்த போலீசார்  அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றியதோடு பர்சானாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |