கோவிலின் நிலம் ஒரு தூசி அளவு கூட வெளியே போகாது என்று சொன்னால் அதை நாங்கள் பாராட்டுகிறோம் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கைது நடவடிக்கையே அங்கு போன குரூப்பில் போதைப் பொருட்கள் பயன் படுத்துகிறார்கள் என்பதை வைத்து வந்திருக்கிறது. இதில் எங்கே மூடி மறைப்பதற்கு இருக்கு. இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே அப்பப்போ சம்மந்தப்பட்ட துறை அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் நாமே மூடி மறைக்கிறார்களா ? வெளியில் கொண்டு வருகிறார்கள் என சொல்ல கூடாது. இதை அரசாங்கம் மூடி மறைக்க விரும்பவில்லை, நேரடியாக நடவடிக்கையில் இறங்குகின்றது, அதனால்தான் இந்த கைது. இந்து அறநிலையத்துறையில் கோவில்கள் உடைய சொத்துக்கள்… குறிப்பாக நிலங்களை வந்து மீட்பதில் நாங்கள் முழுமை அடைந்து விட்டோம் என்று அவரால் சொல்ல முடியுமா ? இல்லை.
இன்னும் அதற்கான வேலைகள் நடந்து இருக்கு. அதனால அதற்க்கு அவர் அதிக கவனம் கொடுக்கட்டும். அப்படி அவர் கோவில் உடைய நிலம் ஒரு தூசி அளவு கூட வெளியே போகாது என்று சொன்னால் அதை நாங்கள் பாராட்டுகிறோம். அந்த எண்ணத்தோடு செயலாற்றினால் நாங்கள் சந்தோஷப்படுகிறேன். ஆனால் நிலைமை அப்படி இல்லையே என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.