அமெரிக்க மாநில பூங்காவிற்கு சென்ற தம்பதியினர் மஞ்சள் நிற அரியவகை வைரம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவை சேர்ந்த Noreen-Michael Wredberg தம்பதி, நாட்டின் 2 தேசிய பூங்காவிற்கு செல்ல முடிவு செய்தனர். இதன்படி கடந்த மாதம் அமெரிக்காவின் Murfreesboro வில் உள்ள 911 ஏக்கரில் அமைந்திருக்கும் Crater of Diamonds என்ற மாநில பூங்காவிற்கு சென்றுள்ளனர். மேலும் 37.5 ஏக்கரில் உழவு செய்யப்பட்ட இந்த பூங்கா தான் உலகின் ஒரே அறிய வகை வைரம் கொண்ட தளமாக திகழ்கிறது.
மேலும் இந்த பூங்காவில் Noreen-Michael Wredberg தம்பதி சுமார் 40 நிமிடங்கள் நடந்துள்ளனர். அந்த சமயம் Noreen தரையில் ஏதோ பிரகாசமாக மின்னுவதை பார்த்து அதனை எடுத்து கணவரிடம் கொடுத்துள்ளார். இதனை பூங்காவின் வைர கண்டுபிடிப்பு மைய அதிகாரிகளிடம் கொடுத்து சோதித்த போது அது வைரம் என உறுதி செய்தனர். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த வியாழன் கிழமை இவர்கள் கண்டுபிடித்த வைரம் ஜெல்லி மீன் அளவில் எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் உள்ளதாக கூறினர்.
மேலும் வைரத்தை கண்டுபிடித்த தம்பதி, அதனை என்ன செய்ய வேண்டும் என இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் வைரத்திற்கு லூசி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வைரமானது 4.3 கேரட் அளவில் சுமார் 15,330 டாலர் மதிப்புக்குரியது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் பூங்காவில் 258 வைரங்களை பார்வையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.