சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் சங்கனேரி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு சிலர் மதுபாட்டில்கள் சப்ளை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சங்கனேரி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சாரம் செய்பவர்களுக்கு 3 பேர் மது பாட்டில்களை சப்ளை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர். ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடினர்.
அதன்பின் காவல்துறையினர் ஒருவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மதுபாட்டில் சப்ளை செய்தவர் ஜெயராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடமிருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய சங்கனேரி பகுதியில் வசிக்கும் சங்கர், மைக்கேல்ராஜ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 21 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 318 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.