தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் புதிய படம் இயக்கப் போவதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவர் இரண்டாவதாக இயக்கிய வை ராஜா வை ஓரளவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
தனுஷுக்காக பல வருடங்கள் காத்திருந்து ஒரு கதையை ஐஸ்வர்யா தனுஷ் தயார் செய்துள்ளார். அந்த படத்தின் கதையை கேட்டு தான் நடிப்பதாக ஒப்புக்கொண்ட தனுஷ் தற்போது ஹாலிவுட் பாலிவுட் என படு பிஸியாக இருக்கிறார். இதனிடையே ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷிடம் தான் இயக்க இருக்கும் படம் பற்றி கேட்டதற்கு சில மாதங்களுக்கு பிறகு நடித்துக் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் உடனடியாக படம் இயக்கும் ஆர்வத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ் இளம் நடிகர் ஒருவரை தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.