தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்துத் தரப்பினரையும் ரசிகர்களாக வைத்திருக்கும் இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனரான சுந்தர் சி சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்து அவரிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு கதை பிடிக்காததால் நிறைய படம் பண்ணுவதாக கூறி தவிர்த்துவிட்டார்.
இதனிடையே சுந்தர் சி-யின் மனைவியான குஷ்புவும் தனது கணவர் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என கூறியதற்கு கண்டிப்பாக நடிக்கிறேன் எனக்கூறி தப்பித்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மறுத்த சுந்தர் சியின் கதை தனுஷிடம் கூறப்பட்டுள்ளது. கதை முழுவதும் கேட்ட தனுஷ் தான் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதுவரை தனுஷும் சுந்தர் சி-யும் இணைந்து பணி புரியாததால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.