Categories
தேசிய செய்திகள்

பேசுவது குற்றமா ? என்னை கைது செய்ய வாரண்ட் உள்ளதா? கொதித்த பிரியங்கா…!!!

உத்திர பிரதேசத்தில் கொல்லப்பட்ட  விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்க காந்தியை  போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதால் பதற்றம்  ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மகன் பயணித்த வாகனம் ஏற்றியதால் விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு  டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரியங்கா லக்னோ சென்றார். சம்பவ இடத்திற்கு அவர் செல்வதை தடுக்க நேற்று இரவே போலீசார் அவரை தடுத்தனர்.

ஆனால் போலீசார் அறிவுரையை மீறி  இரவோடு இரவாக கொல்லப்பட்ட விவசாயிகளின் கிராமத்திற்கு பிரியங்கா புறப்பட்டார். சுமார் 5 மணி நேரம் பயணம் செய்த நிலையில் கருக்கால் என்ற இடத்தில் பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர் அவர்களுடன் பிரியங்கா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தம்மை கைது செய்ய வாரண்ட் உள்ளதா என்றும் பிரியங்கா கேள்வி எழுப்பினார். அதில் அவர், “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்து பேசுவது குற்றமா ? என்னை எதற்கு தடுத்து நிறுத்த வேண்டும்? என்னை கைது செய்ய வாரண்ட் உள்ளதா?” என்று கேள்வி கேட்டார்.

லக்கிம்பூர் செல்லும் வழியில் சித்தாப்பூர் என்ற இடத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் பிரியங்காவை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். பிரியங்கா அடைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதியில் உள்ள அவரது அறையில் குப்பைகள் தேங்கி இருந்தன. இதனை பிரியங்கா பெருக்கி சுத்தம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. சித்தாப்பூரில் வீட்டுக்காவலில் பிரியங்கா வைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதி முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் தரையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |