கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பாலி விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நான்காவது நாடாக இந்தோனேசியா உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்பட்டதால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து வருவதால் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக முடக்கப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் வரும் 14 ஆம் தேதி முதல் பாலி தீவில் உள்ள விமான நிலையம் மீண்டும் திறக்கப்படப்போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக தங்களை 8 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.