நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் carmichael என்னும் சுரங்கம் அமைந்துள்ளது. இதனை அதானி குழுவினர் வாங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பூர்விகமாக வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு காவல்துறையினரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற முடியாது என்று கூறியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தியை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் “வாங்கன் மற்றும் ஜகலிங்கூ பழங்குடியினர் இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இவர்கள் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பண்பாட்டு விழாவினை தொடங்கியுள்ளனர். இவர்களை அதானி குழுமம் ‘புதைபடிவ எரிபொருளுக்கு எதிரான போராட்டக்காரர்கள்’ என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் இது குறித்து காவல்துறையினர் பேசிய குரல் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரிடம் போலீசார் கூறியதாவது “உங்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாடு படிப்படியாக மறைந்து வருகிறது. இருப்பினும் அதை நீங்கள் இழக்க தயாராக இல்லை. தற்பொழுது நீங்கள் உங்கள் பண்பாட்டின் அடிப்படையிலேயே வாழ்ந்து வருகிறீர்கள்.
இது மனித உரிமைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆகவே உங்களை இங்கிருந்து வெளியேற்ற மாட்டோம். மேலும் நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம். உங்கள் மீது அதானி குழுமம் புகார் அளித்துள்ளது. அதற்காக நாங்கள் உங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. ஒருவேளை வேண்டுமென்றால் அதானி குழுமம் சட்ட விதிமுறைகள் படி நடக்கட்டும்” என்று கூறியுள்ளனர். இது போன்று குவீன்ஸ்லாந்து காவல்துறையினர் பழங்குடியின மக்களை வெளியேற்ற மாட்டோம் என்று கூறியது அதானி குழுமத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இக்குழுமம் பழங்குடியின மக்களிடையே நிலப்பயன்பாட்டு கொள்கையை அடிப்படையாக கொண்டு உடன்படிக்கை செய்து கொண்டலும் சில நில உரிமையாளர்கள் இதற்கு சம்மதம் அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் கடந்த 2010ல் சுரங்கம் அமைப்பதற்காக அந்த இடத்தை அதானி குழுவினர் வாங்கியுள்ளனர். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்கி 2022ல் 60 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுயிருந்தது. ஆனால் இன்னும் அதன் பணியை துவக்கவில்லை. மேலும் இந்த போராட்டத்தினால் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் போன்றைவை அதன் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ளதால் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் மந்தமாக்கியுள்ளது.