Categories
உலக செய்திகள்

40,000 ஆண்டுகள்…. பழமை வாய்ந்த குகை கண்டுபிடிப்பு…. ஆய்வு நடத்திய கிளைவ் ஃபின்லேசன் குழுவினர்….!!

பிரிட்டனில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழங்கால குகை ஒன்று ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித இனமானது பல்வேறு பரிணாம வளர்ச்சியில் தான் தோன்றியது. அவ்வாறு தோன்றும் பொழுது பல்வேறு இனங்கள் அழிந்திருக்கும். அதில் ஒன்று தான் நியாண்டர்தால் மனித இனம். இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் உள்ள ஜிப்ரால்டர் பகுதியில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட வான்கார்ட் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கிடைத்த பழங்கால தொல்பொருள்களின் வாயிலாக பண்டைய காலத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தக் குகையினை ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் கிளைவ் ஃபின்லேசன்  தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இக்குகையானது 43 அடி நீளம் உடையது. குறிப்பாக குகையின் அறையின் மேற்பரப்பில் கழுதைப்புலிகள் மற்றும் கழுகுகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. மேலும் கடல் நத்தையும் நான்கு வயது நியாண்டர்தால் மனிதன் ஒருவனின் பல்லும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குகையில் வியப்பூட்டும் விதமாக பலப்பொருட்கள் இருந்துள்ளன. இது கோர்ஹாமின் குகை வளாகம் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக  நியாண்டர்தால் மனித இனம் அழிந்து போவதற்கு முன்பாக வாழ்ந்த கடைசி இடங்களில் ஒன்றாக இக்குகை கருதப்படுகிறது.

Categories

Tech |