Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் மோசமான சாதனை…..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஜித்தா மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதனிடையே இன்று அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சை சிதைத்தனர்.

Image result for Sri Lankan bowler Kasun Rajitha

ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் 64, மேக்ஸ்வெல் 62, வார்னர் 100 என அனைவரும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து 233 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்தது இதனால் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

Image result for Sri Lankan bowler Kasun Rajitha

இப்போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஜித்தா ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தினார். அவர் நான்கு ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 75 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் துருக்கியைச் சேர்ந்த துனாஹான் ட்யூரான் என்ற வீரர் செக் குடியரசு அணிக்கு எதிரான போட்டியில் 70 ரன்கள் வழங்கியதே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |