ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் கடந்த ஓராண்டு காலமாக லிப்ரல் ஜனநாயகக் கட்சியை சார்ந்த யோஷிஹிடே பிரதமராக இருந்தார். அவர் பதவி விலகியதை அடுத்து புதிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமராகவும் ஃபுயோ கிஷிடா தேர்வாகியுள்ளார். இவர் 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஃபுமியோ கிஷிடாயுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஃபுயோ கிஷிடாக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான கூட்டுறவு உறவை வலுப்படுத்தவும் இருநாடுகளுக்கு இடையேயான அமைதியையும் ,வளத்தையும் சீர்படுத்தவும் உங்களுடன் இணைந்து நான் பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்