Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “எதிரிகள் உதிரியாகும் நாள்”… அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது..!!

மன தைரியத்துடன் காரியங்களை எதிர்கொள்ளக்கூடிய கடகராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் உதிரியாகும் நாளாக இருக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். இன்று எதிலும் ஒரு வேகம் இருக்கும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதில் மட்டும் கவனமாக இருங்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையுடனும் காணப்படுவீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும். இன்று பிள்ளைகளிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். அது போல் விளையாடும் போது கொஞ்சம் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் இன்று விநாயகர் வழிபாடுடன் இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |