Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சகோதர சச்சரவு விலகி செல்லும்”… மனம் மகிழ்ச்சியாகவே காணப்படும்..!!

காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று வருமானம் அதிகரித்து வளம் பெருகும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மங்கல செய்தி ஒன்று மனை தேடி வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சகோதர சச்சரவு விலகி செல்லும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும். இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படும். சகோதரர் வழியில் மட்டும் சின்ன சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிள்ளைகள் மூலம் பெருமையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதுகலத்திற்கும் எந்தவித குறையும் இருக்காது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கூடுதலாகவே உழைக்க வேண்டி இருக்கும். விளையாடும் பொழுது ரொம்ப கவனமாக விளையாட வேண்டும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |