Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்சனைகள் உள்ளது… ஜி.கே. வாசன்…

உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்சனைகள் உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் மபொசியின் 26ஆவது மறைந்த தினத்தில் அவருக்கு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு டில்லி தலைநகரத்தில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்தினுடைய கிளை தமிழகத்தினுடைய தலைநகரம் சென்னையில் விரைவில் அமைய இருக்கிறது என்ற மிகச் சிறந்த அறிவிப்பை அறிவித்து இருக்கிறார்கள். இது வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது தமிழ் மக்கள் சார்பில் நன்றிக்கூறியது என்று குறிப்பிட விரும்புகிறேன்.

மூன்று உச்சநீதிமன்றத்தில் உடைய கிளைகளிளே மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னைக்கு ஒரு உச்சநீதிமன்றத்தில் கிளை வர இருப்பது சாமானியனுக்கும் வரும் நாட்களில் நீதி கிடைக்க கூடிய ஒரு உயர்ந்த நிலை ஏற்படும் என்பதை மிக பெருமையோடு இந்த தருணத்திலே நான் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழக நிதியமைச்சர் PTR ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேறக்காததை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

பொதுவா ஜி.எஸ்.டியினுடைய முக்கியத்துவம். அதனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் உறவு, நம்பிக்கை, பொருளாதார ரீதியாக அந்த மாநிலத்திற்கு ஏற்படக்கூடிய வளர்ச்சி இவையெல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள். எனவே மாநிலத்தில் உடைய நிதித்துறையின் அமைச்சர் அதில் கலந்து கொள்வது என்பது நம்முடைய மாநிலத்தினுடைய வளர்ச்சிக்கு உதவும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதே நேரத்தில் நேற்றைய முன்தினம் கூட தமிழகத்தினுடைய நிதியமைச்சர் மத்திய நிதியமைச்சர் சந்தித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. இதனுடைய முக்கியத்துவத்தை தான் நான் கூற விரும்புகிறேன்,அதற்கேற்றவாறு அரசு செயல்பட வேண்டும். மக்கள் அரசை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டுமே நான் இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்… கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தல் முறையாக சரியாக நடைபெற வேண்டும். பல இடங்களில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போதே பல கோளாறுகள், பல பிரச்சனைகள், அது பல இடங்களில் இன்னும் தொடர்கிறது. தமிழகத்தினுடைய தேர்தல் ஆணையம் இவைகளையெல்லாம் முறைப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையிலேயே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய தொடர் வேண்டுகோள் என தெரிவித்தார்.

Categories

Tech |