Categories
அரசியல்

போலீஸின் நடவடிக்கையை கண்டிக்கிறேன் – திருமாவளவன் பரபரப்பு பேட்டி….

போலீசுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் வெற்றி என திருமாவளவன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராடுவதே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான். போராட்டம் என்பதே அரசின் கவனத்திற்கு நம்முடைய பிரச்சனைகளை எடுத்துச் செல்வதற்காக தான், விளம்பரத்திற்காக அல்ல. அந்த வகையில் மோரூரில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து மூன்று கட்ட போராட்டத்தை எனது தலைமையில் நடத்துவது என அறிவிப்பு செய்தேன். முதற்கட்டம் சென்னையில், இரண்டாவது சேலம், மூன்றாவது மதுரையில் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 28 தேதி சென்னையில் திட்டமிட்டவாறு ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தோம்.

அதன் பின்னர் முதல்வர் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. சேலம் மோரூர் பிரச்சனை குறித்து பேச வேண்டுமென்று முதல்வரை சந்தித்த பிறகு முடிவு செய்யலாம் என்று சேலம் மற்றும் மதுரை ஆர்ப்பாட்டங்களை நான் தள்ளி வைத்தேன். அந்த அடிப்படையில் அறிவாலயத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து ஏறத்தாழ முக்கால் மணி நேரம் ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் என்னென்ன பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

உழைக்கும் மக்களை அரசியல் அமைப்பாக்க போராடிக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை குறிப்பாக காவல் துறையினரின் மூலம், வருவாய் துறையினரின் மூலம் எமக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் எடுத்து சொன்னேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட முதல்வர் அவர்கள் இது குறித்து பரிசீலிப்பதாக கூறினார். நம்பிக்கையளிக்கும் வகையில் விடையளித்தார் ஆகவே நாங்கள் தற்போதைக்கு அதை நடத்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்.

சேலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து அரசின் வழிகாட்டுதலின்படி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இருதரப்புக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறோம் என்று சொன்னார். நான் சொன்னேன் இது இரண்டு சாதிகளுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் பார்க்க வேண்டாம், அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் இங்கே முக்கியமானது ? எனவே அதிகாரிகளுக்கும் எங்களுக்குமான பிரச்சினையாகத்தான் மோரூர் வன்முறை என்பது மாறியதே தவிர அது ஜாதி அடிப்படையிலான பிரச்சனையாக கடைசியில் கொண்டு போய் முடிந்தது.

காவல்துறை அதிகாரிகள் அணுகுமுறையால் ஜாதி பிரச்சனையாய்  நிறுத்தி விட்டனர் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே நாங்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டம்.போராட்டத்திலேயே அரசின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியது, எங்களை அழைத்து, எங்களோடு பேசியது, எங்களோட குறைகளை கவனமாக கேட்டுக் கொண்டது. அந்த வகையில் எங்கள் போராட்டம் வெற்றி தான் என திருமாவளவன் பேசினார்.

Categories

Tech |