Categories
உலக செய்திகள்

சர்வதேச அங்கீகாரம் பெற…. தலீபான்கள் இதனை பின்பற்ற வேண்டும்…. பிரான்ஸ் அதிபர் அளித்த நிபந்தனைகள்….!!

தலீபான்கள் சர்வதேச அளவிலான அங்கீகாரம் பெற
பிரான்ஸ் அதிபர் சில நிபந்தனைகளை அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கடந்த செவ்வாய் கிழமை அன்று பிரபல வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கூறியதாவது, “வருகின்ற ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்கான் நாட்டிற்கான சர்வதேச அங்கீகாரம் குறித்த நிபந்தனைகளை தெளிவான செய்தியாக தலீபான்களுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் பெண்களுக்கான சமத்துவம், வெளிநாட்டினரை மனிதாபிமான முறையில் அணுகல் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுடன் ஒத்துழையாமை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக சர்வதேச அங்கீகாரத்திற்கு ஒரு விலை இருக்க வேண்டும் என்றும் நான் நம்புகிறேன். அதுமட்டுமின்றி ஆப்கான் நாட்டு பெண்களின் கௌரவம், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான சமத்துவம் உள்ளிட்டவை ஒரு முக்கிய நிபந்தனையாகவும் இருக்க வேண்டும்.

மேலும் அக்டோபர் மாத கடைசியில் ரோம் நாட்டில் நடைபெறவிருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டின் போது நாங்கள் ஆப்கானிஸ்தானைப் பற்றி நிச்சயம் பேசுவோம். குறிப்பாக இந்த மாநாட்டில் ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், சீனா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பங்கற்க உள்ளன. அந்த சமயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து, தலீபான்களை அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |