கனமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களில் பெய்த கனமழை காரணமாக பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதேபோன்று பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம், கரட்டூர், நல்ல கவுண்டன்பாளையம், மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் அந்தியூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அதுமட்டுமின்றி நகலூர், பெருமாபாளையம், பிரம்மதேசம், ஓசைப்பட்டி, வேம்பத்தி, கீழ்வாணி, ஆப்பக்கூடல் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையினால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.