மனதை அமைதியாகவும் செய்கின்ற செயலை நேர்த்தியாக செய்கின்ற விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய பாதை புலப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை விலகிச்செல்லும். புனிதப் பயணங்களை மேற் கொள்ள முன்வருவீர்கள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எதிர்பார்த்த காரியம் கைகூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புக்கள் கிடைக்கப் பெறுவார்கள். சிலர் குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும்.
திருமண முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலனை கொடுக்கும். பிள்ளைகளுடன் சந்தோசமாக இன்று பொழுதைக் கழிப்பீர்கள். இன்றைய நாள் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே காண்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டில் கவனம் செல்லும். இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். அதுபோலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்