9-வது குழந்தையை பெற்றெடுத்த 4 நாட்களில் பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் எட்மண்டனில் 8 குழந்தைகளுக்கு தாயாக இருந்த Jennifer Rosebluff-Thomas கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Jennifer-ன் நிலைமை திடீரென மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது Jennifer தன் சகோதரியான Carol Charles-யிடம் “என்னை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆகவே நான் சாகப்போகிறேன்” என்று கூறி அழுது இருக்கின்றார். இதனிடையில் Jennifer-க்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை எடுக்க வேண்டிய மோசமான நிலை உருவாகியது.
அதன்பின் Jennifer-க்கு சுயநினைவு திரும்பாத நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு பெற்ற குழந்தையை கையில் வாங்காமலேயே தன் உயிரை விட்டார். இதற்கு முன்பாக Jennifer- இடம் குழந்தைகளின் நலன் கருதியாவது தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அவரது சகோதரி Carol Charles-வற்புறுத்தியுள்ளார். ஆனால் Jennifer தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இதனால் தற்போது தன் சகோதரியின் இறப்பை கூறி கர்ப்பிணிகள் அனைவரும் தடுப்புசி செலுத்தி கொள்ளுமாறு Carol Charles- அறிவுறுத்துகிறார். இதுகுறித்து Carol Charles-கூறியபோது “கொரோனா பரவல் உண்மையாக இருக்கிறது. என் சகோதரி Jennifer இறந்த நிலையில் இப்போது அவளது 9 குழந்தைகளும் தாய் இல்லாமல் வாழ வேண்டியது இருக்கிறது” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.