முகக்கவசத்தை சரியாக அணிய சொல்லிய மலேசியரை கன்னத்தில் அறைந்த இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிகளவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தியது. தற்போது ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் அங்கு முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தியாவை பூர்விகமாக கொண்ட சந்திர சேகர் என்பவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் பொது இடத்தில் முகக்கவசத்தை சரியான முறையில் அணியவில்லை என கூறப்படுகிறது. இதனால் சிங்கப்பூரை சேர்ந்த ஒருவர் சந்திர சேகரிடம் முகக்கவசத்தை சரியாக அணியுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரின் பேச்சை சந்திர சேகர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் அந்த நபர் மீண்டும் முகக்கவசத்தை சரிசெய்ய அவரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து மிகுவும் கோபமடைந்த சந்திர சேகர் அந்த நபரை கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மலேசியாவை சேர்ந்த நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சந்திர சேகர் மீது அளித்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு 7 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.