Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “தேக நலனில் தெளிவு பிறக்கும்”… மன தைரியம் கூடும்..!!

உடல் கவர்ச்சியும் மிருதுவான மனமும் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தேக நலனில் தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று கவனமாக அடுத்தவரிடம் பழகுவது மட்டும் நல்லது. விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை ஏற்படும். மன தைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் கொஞ்சம் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

பணவரவு இருந்தாலும் தேவை மட்டும் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளரிடம் பேசும் போது கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் முன்னேற்றம் அடையக்கூடும். விளையாட்டில் அதிகப்படியான ஆர்வம் இன்று இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போதோ முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதுபோலவே  காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் காவி நிறம்

Categories

Tech |