Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் நாளை மறுநாள் பிரம்மோற்சவ விழா தொடக்கம்…. இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா….??

திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை மறுதினம் தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனால் பக்தர்கள் மதியம் 12 மணி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. புதன்கிழமை மாலை 5.10 மணியளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும் 8ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், 9ஆம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், பத்தாம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், பூத வாகனம் 11ஆம் தேதி காலை மோகினி அவதாரம் இரவு கருட சேவை 14ஆம் தேதி காலை 8 மணிக்கு இதற்கு மாற்றாக சர்வ பூபால வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 15-ஆம் தேதி 6 மணி முதல் 8 மணி வரை பல்லக்கு உற்சவம் நடைபெற இருக்கிறது. 8 மணி முதல் 9 மணிக்கு மேல் பிரம்மோற்சவ கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறும். இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டுவரவேண்டும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories

Tech |