நாளைய பஞ்சாங்கம்
06-10-2021, புரட்டாசி 20, புதன்கிழமை, அமாவாசை திதி மாலை 04.35 வரை பின்புவளர்பிறை பிரதமை.
அஸ்தம் நட்சத்திரம்இரவு 11.19 வரை பின்பு சித்திரை.
மரணயோகம் இரவு 11.19 வரை பின்புசித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
மஹாளய அமாவாசை.
முன்னோர் வழிபாடுநல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
நாளைய ராசிப்பலன் – 06.10.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத வகையில் திடீர் பணவரவுஉண்டாகும். வீட்டில் பெரியவர்களின்நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின்படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில்உதவிகள் கிடைக்கும். கொடுக்கல்வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடியசூழ்நிலை உருவாகும். கணவன்மனைவியிடையே கருத்து வேறுபாடுகள்தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் உண்டாகலாம். திருமணமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகிட்டும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்றுமந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில்ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்குகுடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும்கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடுநன்மையை தரும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள்வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதியநபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீகசொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் காரியங்களில்வெற்றி பெற யோசித்து செயல்படுவதுநல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகைசெலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காகஎடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள்குறையும். எதிலும் நிதானம் தேவை.
கன்னி
உங்களின் ராசிக்கு உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள்படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள்மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில்கிடைக்கும். வெளியூர் பயணங்களால்தொழிலில் அனுகூலம் கிட்டும்.
துலாம்
உங்களின் ராசிக்கு எந்த காரியத்தை செய்தாலும்தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சகநண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள்உண்டாகும். வெளியூர் பயணங்களால்அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பைதரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தாராள தனவரவுஉண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம்ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிபொறாமைகள் குறையும். உத்தியோகரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்புகிட்டும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும்சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர்பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சிகூடும். நண்பர்களால் அனுகூலம்உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபம் கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்றபிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. கூட்டாளிகளின்ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்தலாபம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று குழப்பமாகவேகாணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்றுசந்திராஷ்டமம் இருப்பதால் எந்தசெயலையும் நிதானத்துடன் செய்வதுநல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுதுகவனமாக பேச வேண்டும். வாகனங்களில்செல்லும் பொழுது எச்சரிக்கையுடன்செல்வது நல்லது.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் பணவரவுகள்உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும்செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும்.