Categories
அரசியல்

ஆட்டு குட்டி பரிசளித்தது…. ஆஸ்கார் விருது பெற்றது போல் இருக்கு…. அண்ணாமலை நெகிழ்ச்சி…!!

திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாள் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாநில பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வருகை புரிந்தார். இதன் பின்னர் திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து  சென்னிமலையில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு அக்கட்சியினர் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.

இதனை பெற்றுக் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்டுக்குட்டியை ஒன்றிய பாஜக நிர்வாகிகள் எனக்குப் பரிசாகக் கொடுத்தனர். இதனால் எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது போல் இருக்கின்றது. மேலும் கொங்கு மண்டலத்தில் வேளாண் சின்னமாகவும், நம் பண்பாட்டின் கம்பீர அடையாளமாக நான் ஆட்டுக்குட்டியை பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Categories

Tech |