Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரின் மகனை கைது பண்ணுங்க…. நவ்ஜோத் சிங் சித்து ஆவேசம்…!!!

உத்திரப்பிரதேச விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் போராட்டம் செய்தனர். அப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, அந்த வழியாக காரில் சென்ற பொழுது விவசாயிகள் மீது மோதியதில் 6 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

இதனையடுத்து இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். இதுக் குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “விவசாயிகள் மரணத்திற்காக மத்திய அமைச்சரின் மகனை நாளைக்குள் உடனே கைது செய்யபட வேண்டும். மேலும் சட்டத்திற்கு புறம்பாக பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே விரைவில் அவரை விடுதலை செய்யாவிட்டால் பஞ்சாப் மாநில காங்கிரஸார் லக்கிம்பூர் கேரி பகுதியை நோக்கி படையெடுத்து போராட்டம் நடத்துவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |