எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசேகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் இரவில் வீட்டின் பின்புறம் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குணசேகரன் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து குணசேகரனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் குணசேகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த வடக்கு விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குணசேகரன் மர்மமான முறையில் இறந்தது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.