27 சதவிகித இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவது தொடர்பாக தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
27% இட ஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் அமல்படுத்தவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தார்கள்.. இந்த அரசாணைக்கு எதிராகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில், முக்கியமானதாக இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும்.. இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில் பல ஆண்டுகளாக எங்களது இயக்கம் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்திவருவதன் காரணமாக எங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.. எங்களது தரப்பு கருத்துக்களை கேட்க வேண்டும் என்று இடைக்கால மனுவில் குறிப்பிட்டுள்ளார்..
இரண்டாவது, 27 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவதில் எந்த விதமான தடையும் விதித்து விடக்கூடாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அந்த அரசாணையை அப்படியே அதனை அமல்படுத்த வேண்டும் என்ற விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது..
அதாவது மனுதாரர்கள் ஒருவேளை ஏதாவது கோரிக்கை வைத்து இந்த ஆண்டு 27 சதவீத இட ஒதுக்கீடு முறையை உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதித்து விடக்கூடாது.. இது தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை இடைக்கால மனுவில் வைத்துள்ளார்கள்.. ஓபிசி பிரிவினருக்கு வழங்கக்கூடிய 27 சதவீத இட ஒதுக்கீடு முறையானது இந்த ஆண்டு கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக திமுக தனது மனுவில் வாயிலாக சொல்லியுள்ளது..