தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திமுக அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நடந்த முன்னாள் எம்எல்ஏவின் திருமணத்திற்கு வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக பேனர் வைத்ததில் 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து மோகன் ராஜ் என்பவர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக திமுக மற்றும் தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.