சமூக வலைதளங்களில் வைரலான குரங்குகள் நடத்திய பாசப் போராட்டக் காட்சிகள்.
விருதுநகர் மாவட்டத்தில் தாணிப்பாறை சதுரகிரி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலையில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. இதனை அடுத்து குரங்குகள் இரைதேடி மலை அடிவாரம் பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒரு குரங்கின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் குரங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதனால் மற்ற குரங்குகள் சோகத்தில் இருந்துள்ளன. இதனை பார்த்த பொதுமக்கள் குரங்கின் பாசப் போராட்டத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குரங்கை மீட்டு பிரேத பரிசோதனை செய்த அவ்விடத்திலேயே நல்லடக்கம் செய்து உள்ளனர்.