Categories
Uncategorized

திருப்பதி மலைப்பாதையில் புலிகள் நடமாட்டம்…. அச்சத்தில் பக்தர்கள்….!!!

திருப்பதிக்கு செல்லும் நடைபாதையில் சிறுத்தை புலிகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் மலைப்பாதை வழியே நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அந்த கோவில் அருகே சிறுத்தை புலி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது.

இதனை அவ்வழியாக காரில் சென்ற பக்தர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சைரன் ஒளித்து பக்தர்களை எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதையில் சிறுத்தை புலிகள் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |