Categories
தேசிய செய்திகள்

மதியத்துக்கு அப்புறம் ஸ்கூல் லீவ்…. அரசின் அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி….!!!!

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பிற்பகல் வரை மட்டுமே பள்ளிகளை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பிரணாய் விஜயன் கூறுகையில், ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளதால் பள்ளி கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளும் மதியம் வரை மட்டுமே நடத்தப்படும் எனவும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த யோசனை செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்கப்பள்ளிகளில் ஒரு பெஞ்சில் ஒரு மாணவரும் எட்டாம் வகுப்புக்கு மேல் ஒரு பெஞ்சில் 2 மாணவர்களும் அமர அனுமதிக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |