உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதினால் அதை நடத்தும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் குறித்த புகார்களை பார்வையாளர்களின் செல்போன் எண்ணிற்கு அழைத்து தெரிவித்துக் கொள்ளலாம். பின்னர் அவற்றின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நெமிலி துணை ஆட்சியர் ஸ்ரீவள்ளி 9443472844, வாலாஜா மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி 9965313372, அரக்கோணம் கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத் 9941332021, சோளிங்கர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரம் 8903500425, ஆர்காடு உதவி இயக்குனர் ஸ்ரீதர் 9043073186, காவேரிப்பாக்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் சசிகலா 8903456342, ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் பங்கொடி 9445000416. மேலும் இந்த தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.