Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 15,000 இருக்கும்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…‌.!!

15,000 மதிப்புடைய குட்கா பொருட்களை கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை நிறுத்தி ஓட்டுனரை விசாரணை செய்த போது அவர் சலீம்பாஷா என்பதும் 15,000 மதிப்புடைய குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |