தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வந்து தங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். பலமுறை அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தகராறு ஏற்படுவது உண்டு. அவ்வபோது விஜயை திட்டி அஜித் ரசிகர்களும் அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர்களும் ஹாஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் மோதிக் கொள்வார்கள். இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இவ்வாறான ஹாஸ்டேக் மோதல் ஏற்படும் போது தேசிய அளவில் அதனை டிரென்ட் செய்து விடுவார்கள்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்க்கும் இடையே இருக்கும் பிரச்சனையினால் தந்தை மகன் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் அஜீத் ரசிகர்கள் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என்று ஹாஸ்டேக் உருவாக்கி விமர்சித்து வருகின்றனர். அதேபோன்று விஜய் ரசிகர்கள் #வாழவிடுங்க_அஜித் என்கிற ஹாஸ்டேக் உருவாக்கி டிரென்ட் செய்து வருகின்றனர்.