Categories
மாநில செய்திகள்

ராமலிங்க அடிகளார் பிறந்தநாள்…. தனிப்பெரும் கருணை நாளாக கடைபிடிக்கப்படும்…. மு.க ஸ்டாலின்…!!!

தமிழக அரசின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 05.10.1823 ஆம் ஆண்டு பிறந்தார். இத்தகைய ஞானி தனது வாழ்க்கை நெறியாக கருணை ஒன்றை வைத்து வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்தார்.

இதனையடுத்து அவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை, அனைத்து நம்பிக்கைகளும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வகையில் அமைத்தார். இதனை தொடர்ந்து ஞான சபையை வடலூரில் நிறுவினார். மேலும் இவர் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியதற்கு ஏற்ப சத்திய தருமசாலையை மக்களின் பசியைப் போக்குவதற்காக அமைத்தார். இந்நிலையில் மக்களின் வயிற்றுப் பசியை நிரப்புவதற்காக அவர் ஏற்றிய அடுப்பானது இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.

மேலும் இவர் அதிகமான பாடல்கள் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் போன்ற உரைநடையும் எழுதியுள்ளார். இவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த திருவருட்பா ஆறு திருமுறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவர் பசிப்பிணி போக்கும் மருத்துவராகவும் இருந்துள்ளார். எனவே இவரது பிறந்த நாளான நேற்று (அக்டோபர் 5) ஒவ்வொரு ஆண்டும் தனிப்பெரும் கருணை நாளாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |