Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : ராஜஸ்தானை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் …. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி  அபார வெற்றி பெற்றுள்ளது .

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீச்சை நடத்தின  .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துதிணறியது .இதனால் 50 ரன்னுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்னில் சுருண்டது. மும்பை அணி தரப்பில்  நீஷம் 3 விக்கெட்டும்,  பும்ரா 2 விக்கெட்டும், கவுல்டர்-நைல் 4 விக்கெட்டும் கைப்பற்றினார். இதன் பிறகு 91  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா- இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர்.இதில் கேப்டன்  ரோஹித் சர்மா 22 ரன்னில் ஆட்டமிழக்க , அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார் .இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 50 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக மும்பை அணி 8.2 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது .இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது .

Categories

Tech |