கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் .இவருக்கும் முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியனான சாகர் தங்கருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது .அப்போது சுஷில் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகரை கடுமையாக தாக்கினார்.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வீரர் சுஷில் குமாரை கடந்த ஜூன் 2-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக வீரர் சுஷில் குமார் தரப்பில் டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே உயிரிழந்த சாகர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நிதின் வசிஷ் ,சுஷில் குமாருக்கு ஜாமீனில் விடுவிக்க கூடாது என்று வாதாடினார். இந்த நிலையில் இந்த ஜாமின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது .இரு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில்குமாரின் ன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிடுள்ளது .