தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார்.