Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு….!!!!

கேரளாவின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து நவம்பர் 1 முதல் 1-7 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாத அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தொடங்குகின்றன. 8,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இந்நிலையில் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

1 முதல் 7-ஆம் வகுப்புகளில் அதிக பட்சமாக 10 மாணவர்களையும், 8 ஆம் வகுப்புக்கு மேல் 20 மாணவர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் ஒரு பெஞ்சில் ஒரு மாணவரும், 8 ஆம் வகுப்புக்கு மேல் ஒரு பெஞ்சில் இரண்டு மாணவர்களும் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து வகுப்புகளும் மதியம் வரை மட்டுமே நடத்தப்படும். சனிக்கிழமை களும் வகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |