இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் அமைதி, இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை புரியும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நோபல் பரிசு கௌரவமிக்க விருதாக உலக அளவில் கருதப்படுகிறது. அதிலும் நார்வே நாட்டில் மட்டும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. அதை தவிர சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் மற்ற விருதுகள் அனைத்தும் அறிவிக்கப்படுகின்றன.
மேலும் இந்த நோபல் பரிசுக்கு ரூ.8 1/2 கோடி பரிசு பணமும், தங்க பதக்கமும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நோபல் பரிசு அறிவிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு முதல் விருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவத்துக்கான நோபல் பரிசினை நோபல் பரிசு கமிட்டி தலைவர் தாமஸ் பெர்மன் அறிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்டெம் பட்டபவுசியன், டேவிட் ஜூலியஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இதனையடுத்து இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிளாஸ் ஹாசில்மேன் (ஜெர்மனி), சியுகுரோ மனாபே (அமெரிக்கா), ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) உள்ளிட்ட 3 விஞ்ஞானிகளுக்கு இந்த இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.