மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 70 கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவிலில் உள்ள பூ, பழம் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்கும் 70 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கு மேற்பட்ட கடைகள் எரிந்து சேதம் ஆகிய நிலையில், அதிகமாக கடைகள் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக கடை உரிமையாளர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற வழக்கு விசாரணையில் கடைகள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் மதுரை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவிலில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் 70 கடைகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.