Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையை மீறிய போராட்டக்காரர்கள்…. கடுமையாக விமர்சனம் செய்த பிரதமர்…!!

இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட Insulate Britain என்னும் போராட்டக்காரர்களை அந்நாட்டின் பிரதமர் விமர்சனம் செய்துள்ளார்.

இங்கிலாந்த் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி அக்டோபர் 4 ஆம் தேதி Insulate Britain என்னும் போராட்டக்காரர்கள் லண்டன் நகருக்குள் நுழைந்து அங்குள்ள பல முக்கிய பகுதிகளில் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் எச்சரிக்கையை மீறி லண்டன் நகருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது இங்கிலாந்து நாட்டின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் படியான செயல்களில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் பொறுப்பற்ற கொடூரர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |